குட் நியூஸ்..!! தமிழகத்தில் 4 மற்றும் 6 வழிச்சாலையாக மாறும் தேசிய நெடுஞ்சாலைகள்..!

 
Q

தமிழ்நாட்டில் மொத்தம் 339 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுகளை 6 வழி மற்றும் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய சாலை விரிவாக்கத் திட்டங்கள்

• 6 வழிச்சாலை: தருமபுரி - கரூர் - திண்டுக்கல் - சமயபுரம்/சமயநல்லூர் வழித்தடம் 6 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

• 4 வழிச்சாலை: NH-744A மதுரை ரிங் ரோடு இரண்டாம் கட்டம் மற்றும் தாமரையப்பாடி - டி. புதுப்பட்டி பிரிவு ஆகியவை 4 வழிச்சாலைகளாக விரிவாக்கப்பட உள்ளன.

இந்த 339 கிலோ மீட்டர் தொலைவில் சாலைகளை மேம்படுத்தும் போது போக்குவரத்து எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.