குட் நியூஸ்..!! தங்கம், வெள்ளி.. ரூ.5,000 குறைந்தது..!!

 
gold

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை நோக்கிப் பயணித்து வருகிறது. ஒரு கிராம் ரூ.16 ஆயிரம் வரை சென்ற தங்கம் விலை, தற்போது குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. போரின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நிச்சயமற்ற முதலீடுகளை உலக நாடுகள் தவிர்த்து வருகின்றன.

என்னதான் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கள் இருப்பிலிருக்கும் தங்கத்தை விற்று வருகின்றனர். இதனால், தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300-க்கும்; சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,900-க்கும்; சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200-க்கும் விற்பனை. கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 9,500 வரை சரிந்தது..

அந்த வகையில், சென்னையில் இன்று (மார்ச் 20) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.