குட் நியூஸ்..!! அதிரடியாக சரிந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 2,120 குறைவு..!!
Mar 4, 2026, 09:43 IST1772597604398
தங்கத்தின் முக்கியத்துவமும், மதிப்பும் இந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, பண வீக்கம், பங்குச் சந்தை வீழ்ச்சி போன்றவை பல்வேறு காரணங்கள் விலையேற்றத்துக்கு காரணமாக சொல்லப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலும் விலையேற்றம் தொடர்ந்த நிலையில், ஜனவரி இறுதியிலிருந்து சற்று குறையத் தொடங்கியது.
அதன் பிறகு, ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலையானது கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதும் ஒரே நாளில் சட்டென உயர்ந்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் விலையேற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் நேரத்தில் உலகளவிலான முதலீட்டில் டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதனால் தங்கம் விலை சற்று குறையும். இருப்பினும் இந்த விலை குறைவு நிரந்தரமல்ல என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து விற்பனையாகிறது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 265 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சவரனுக்கு ரூ. 2120 குறைந்து ரூ. 1,21,660 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,95,000க்கும் விற்பனையாகிறது.

