குட் நியூஸ்..!! 2-வது நாளாக சரிவைக் கண்ட தங்கம் விலை..!!
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று சரிவைக் கண்டது.
கடந்த மாதம் (அக்டோபர்) 17ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.12,200க்கும், ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்கப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத உச்ச விலையாகப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், கடந்த மாதம் 28ஆம் தேதி, ஒரு சவரன் விலை ரூ.89 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது.
இந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100ம், சவரனுக்கு ரூ.800ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.173க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,69,000க்கும் விற்பனையாகிறது.


