செம குட் நியூஸ்..!! தங்கம் விலை ஒரே நாளில் 3,040 ரூபாய் குறைந்தது..!!
Jun 19, 2026, 09:46 IST1781842571266
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. விரைவில் ஹார்முஸ் அணை திறக்கப்பட்டு கச்சா எண்ணெய் பிரச்சினையும் சரிசெய்யப்பட இருக்கிறது. இதனால் தங்கம் விலை விறுவிறுவென ஏறலாம் என்று அஞ்சப்பட்டது.. ஆனால் நடந்ததோ வேறு...
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 19) ஒரே நாளில் சரிந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.111,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும், கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கும் விற்கப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

