குட் நியூஸ்..!! தங்கம் விலை மீண்டும் சரிவு..!!

 
Gold

சர்வதேச அளவில் நிலவும் தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் தாக்கம் தங்கத்தின் மீது பிரதிபளிக்க, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வந்தது.

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் தாக்குதல் தொடங்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட மீண்டும் பேச்சு வாரத்தை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை சரிவை கண்டுள்ளது. அதே நேரம் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.105,720-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையாகிறது.

அதே போல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது