குட் நியூஸ்..!! ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது..!!
மேற்காசிய போர் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வந்தது. இதனையடுத்து, இதன் மீதான முதலீடு அதிகரித்த காரணத்தினால், தங்கத்தின் விலை குறைய தொடங்கியது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமன்ற சூழல் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நாளுக்கும் நாள் சிறிய அளவில் ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது.
மேற்காசியவில் மீண்டும் போர் சூழல் எழுந்துள்ள நிலையில், தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை என்பது தொடர் சரிவை கண்டு வருகிறது.
நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.
இன்று (ஜூலை 17) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது

