குட் நியூஸ்..!! சற்று குறைந்த தங்கம் விலை..!
May 26, 2026, 09:41 IST1779768702434
உலகளவிலான வர்த்தகங்கள் நிலையற்று காணப்படுகிறது. டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், பண வீக்கம், நிதி நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு தங்கம் விலையும் விதி விலக்கல்ல.
முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் வெள்ளி மீதும் முதலீடு செய்ய தொடங்கியதால், சதவீதத்தில் ஒப்பிடுகையில், தங்கத்தைவிட வெள்ளி விலை கணிசமான ஏற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. இதனால் ஏற்படும் இழப்பீட்டை சமன்படுத்த தங்கம் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
இன்று (மே 26) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,17, 840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கு விற்பனையாகிறது.

