குட் நியூஸ்..!! 2வது நாளாக குறைந்த தங்கம் விலை..!!
Oct 22, 2025, 10:08 IST1761107938953
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 60 ஆயிரமாக இருந்த தங்கம் விலை தற்போது ரூ. 95 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 2 ஆயிரத்து 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 97 ஆயிரத்து 440க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 260 அதிகரித்து ரூ. 12 ஆயிரத்து 180க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று காலை அதிகரித்த தங்கம் விலை மாலை குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1 ஆயிரத்து 440 குறைந்து ரூ. 96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 180 குறைந்து ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. பவுனுக்கு ரூ.2400 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.93,600 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு ரூ.300 குறைந்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி இன்று (அக்டோபர் 22) 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,80,000 ரூபாயாக இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளது.


