குட் நியூஸ்..!! ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.260-ம், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து, மாலையில் அந்த விலையில் இருந்து கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்தது.மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
நேற்று காலையில் சரிந்து மாலையில் ஏறிய நிலையில், இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்குமோ என இல்லத்தரசிகள் திகிலுடன் காத்திருந்த நிலையில், தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 11,700 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000-ஆகவும் விற்பனையாகிறது.
இந்நிலையில் இன்று காலையில் ₹2,400 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,280 குறைந்துள்ளது. இதன்மூலம், 1 கிராம் ₹11,540-க்கும், 1 சவரன் ₹92,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரேநாளில் தங்கம் விலை பெரியளவில் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


