குட் நியூஸ்..!! இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!!

 
Gold

தங்கம் விலை கணிக்க முடியாத வகையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் விறுவிறுவென ஏறிய விலையானது, மாத இறுதியில் தடாலடியாக குறைந்து நகை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், தற்போது மீண்டும் விலை ஏறி வருவதால் தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று (செப்டம்பர் 4) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.255-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 5) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,360 குறைந்து, ரூ.1,13,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.