குட் நியூஸ்..!! தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது!
தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஜனவரி 2-ஆம் தேதியான தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையானது.
இன்று (ஜன.3) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.256க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,56,000க்கும் விற்பனையாகிறது.


