ரூ.100 கோடி வசூல் செய்த GOOD BAD UGLY

அஜித் குமார் நடிப்பில் வெளியான GOOD BAD UGLY திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 10ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித் குமார் நடிப்பில் வெளியான GOOD BAD UGLY திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் நாளில் இந்தப் படம் ரூ.30.9 கோடி வசூல் செய்திருந்தது. அஜித் சினிமா கேரியரில் இதுவே அதிகபட்ச முதல் நாள் வசூலாகும். அதேசமயம் உலக அளவில் குட் பேட் அக்லி சுமார் 175 கோடியை தாண்டியிருக்கும்.