தங்க மோதிர திட்டம் தொடக்க விழா இடமாற்றம்
தங்க மோதிர திட்டம் தொடக்க விழா இடமாற்றம் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதால் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. முதற்கட்டமாக ஒரு கிராம் மதிப்பிலான 1,106 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்தன. மருத்துவமனையில் பாதுகாப்பு பெட்டகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை எப்போதுமே பின் தங்கிய பகுதி என ஒதுக்கி விடுவார்கள், ஆனால் ஒரு வார்த்தைக்கு கூட அவ்வாறு இருக்க கூடாது என முதல்வர் விஜய் உசிலம்பட்டியை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறவிருந்த விழா, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

