மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 13 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

 
1

மும்பைக்கு வரும் சில பயணிகள் தங்கம் கடத்துவதாக சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின்போது, 20 தங்கக் கடத்தல் சம்பவங்களில் 11 பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவரிடமிருந்து ரூ.13.56 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தினத்தந்தி தகவல் தெரிவித்தது.

சோதனையில் அவர்களின் உள்ளாடைகள், இடைவார், வளையல் ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.இந்தக் கடத்தலில் கைது செய்யப்பட்ட 11 பயணிகளில் ஒருவரின் மலக்குடலில் மெழுகு வடிவில் தங்கத்தூசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரின் மலக்குடலில் இருந்த தங்கத்தூசி மருத்துவரின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.

தங்கம் கடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.