ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்..!

 
1

தெற்கு வங்காள எல்லைக்கு உள்பட்ட ஆயுதப்படை எல்லைப் புறக்காவல் நிலையத்தின் குனர்மத் பகுதியில் உள்ள ஹல்தர்பாடா கிராமத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அலோக் பால் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரின் வீட்டில் இருந்து வெவ்வேறு அளவுகளில் 89 தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அவர் பங்ளாதேஷில் இருந்து இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கடத்திவந்து, தனது வீட்டில் அவற்றை மறைத்து வைத்திருந்தார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 16.067 கிலோ என்றும் சந்தை மதிப்பு ரூ.12 கோடி என்றும் அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன. எல்லை தாண்டிய தங்கக் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்படுகிறது.