ஓசூரில் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள தங்க வாட்ச் திருட்டு

 
ச் ச்

ஓசூரில் பிரபல வாட்ச் கம்பெனி ஷோரூமில் 5 லட்சம் மதிப்புள்ள தங்க வாட்ச் திருட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஓசூர் முதல் சிட்காட் பகுதியில் இயங்கி வரும் டைட்டான் வாட்ச் தயார் செய்யும் கம்பெனி அருகில் வாட்ச் விற்பனை செய்யும் ஷோருமும் உள்ளது. நேற்று மதியம் இந்த ஷோரூமுக்கு வந்த ஒரு நபர், தங்க கடிகாரங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாட்ச்களை பார்வையிட்டுள்ளார். அப்போது திடீரென அவர் ஒரு தங்க வாட்சை எடுத்து திருடி சென்றுள்ளார். இந்த தங்க வாட்ச் டைட்டன் வாட்ச் கம்பெனி தொடங்கி 40 வருடங்கள் ஆனதை முன்னிட்டு முதன் முதலில் தயாரித்த கைக்கடிகாரத்தின் மாடலை அப்படியே தங்கத்தில் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும் கூறப்படுகிறது. தங்க வாட்ச் திருடப்படும் நேரத்தில் ஷோரூமில் இருந்த ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாட்ச் ஷோரூம் நிர்வாகத்தினர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் போலீசார் ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.