அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் 5,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,320ஆக  விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளி விலை குறைந்தது.  வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.