தங்கம் விலை குறைந்தது - இல்லத்தரசிகள் சற்று நிம்மதி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.45,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.440 அதிகரித்து  ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினமான நேற்று தங்கம் அதே விலையில் நீடித்தது. 

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.78.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.