அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமுமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5,275 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 42,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளி கிராமிற்கு 30 பைசா உயர்ந்து 72.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.