தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்தது. 

gold

இந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5730க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .