மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையானது. தீபாவளி தினத்தன்று அதே விலையில் விற்பனையானது. இதேபோல் நேற்று  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,720க்கு விற்பனையானது.. ஒரு கிராம் தங்கம் விலையானது ரூ.10 குறைந்து ஒரு கிராம் ₹5,590க்கும் விற்பனையானது.

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறாது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.76.00க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.