தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்று ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 50 பைசாவாகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயந்து ரூ.78.20 ஆகவும், கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.