மீண்டும் அதிகரித்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரண் தங்கம் 43 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 77 ரூபாயாகவும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 77,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனையாகி வந்தது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 50 பைசாவாகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரமாகவும் உள்ளது.