யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை - சவரன் 44 ஆயிரத்தை தாண்டியது

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10ம் தேதி விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது. திங்கட்கிழமை ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. புதன் கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.460 உயர்ந்து, ரூ.43,400க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.5,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது .இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,520  ஆக விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.