ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை - ஒரு சவரன் 44 ஆயிரத்தை நெருங்குகிறது

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10ம் தேதி விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது.திங்கட்கிழமை ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.460 உயர்ந்து, ரூ.43,400க்கும் விற்கப்பட்டது. 

gold

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய்க்கு அதிகரித்து  5,450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.10-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.47,560-க்கு விற்பனையாகிறது.