தொடர் உச்சத்தில் தங்கம் விலை - சவரன் 43 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 11-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டது. 11ம் தேதி சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 11ம் தேதி ஒரு சவரன் ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஞாயிற்று கிழமையும் அதே விலையில் நீடித்தது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது.  கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்தது.  கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையானது. 

gold

இந்நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று 1 கிராம் ரூ.5,325-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ.72-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,000-க்கு விற்பனையாகிறது.