தொடர் சரிவில் தங்கம் விலை...! 3வது நாளாக இன்றும் குறைந்தது!

 
gold
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,215க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.