அதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850 ஆக விற்பனை செய்யப்பட்டது.  இதேபோல் நேற்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.77.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.