இல்லத்தரசிகள் சற்று நிம்மதி - தங்கம் விலை இன்று சரிவு!

 
gold

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,640 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,160 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,770க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.