ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ₹360 குறைந்த நிலையில், தற்போது ₹320 அதிகரித்துள்ளது.
 
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.  செவ்வாய் கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,520 க்கு விற்பனையானது.

இதனிடையே இன்று காலை தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,020க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில்,  ஒரே நாளில் 2வது முறையாக ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை சவரனுக்கு ₹360 குறைந்த நிலையில், தற்போது ₹320 அதிகரித்துள்ளது!