மீண்டும் எகிறிய தங்கம் விலை! சவரன் ரூ.92,800-ஐத் தொட்டது!

 
Gold

தங்கம் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பு, அந்த நாட்டின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதம், உலகளாவிய போர் பதற்றம் போன்ற பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இது குறிப்பிட்ட குறுகிய அல்லது நீண்டகால மாற்றங்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி மாற்றம் கண்டு வருகிறது. இதற்கு சர்வதேச கமாடிட்டி சந்தைகளில் செய்யப்படுகிற டிரேடிங்குகளே காரணமாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு, இன்று கமாடிட்டி சந்தையில் டிரேடர்கள் தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்கினால், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும். 

நேற்று (நவம்பர் 26) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கும், ஒரு சவரன் ரூ.2,360 உயர்ந்து ரூ.92,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.165-க்கு விற்பனையானது

இன்று (நவம்பர் 27) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.170-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.1,70,000-க்கு விற்பனையாகிறது.