தமிழ்புத்தாண்டு தினமான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது..!!

 
Q

மேற்காசிய போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், ஈரான், அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாக இந்த வாரமும் தங்கம் விலையில் கணிக்க முடியாத மாற்றங்கள் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 11) தங்கம் விலை சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 13) சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.14) சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. நேற்று (ஏப்.13) ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,13,760க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,060க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.