தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.92,800-ஐ தொட்டது!
தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.1,440 உயர்வு.
நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.நவம்பர் 25ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் குறைந்து சவரன் 91,360 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 11,420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 165 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரம்நேற்று (நவம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து 92,320 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து 11,540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றிமின்றி கிராம் 165 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று (நவம்பர் 27) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம், 92,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 11,6000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,440 அதிகரித்துள்ளது.
அதேபோல, வெள்ளி விலையும் இன்று ஏறுமுகமாகியுள்ளது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 170 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் உயர்ந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

