பதற்றத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது..!!
தங்கம் விலை இவ்வளவு குறையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால் அடுத்த இரண்டு நாட்களில் அதை விட அதிமாக ஏறிவிடும். கடந்த இரண்டு வருடங்களில் நகை விலை ஏற்ற, இறக்கம் இப்படி தான் இருந்தது. ஆனால் அமெரிக்கா - ஈரான் போருக்கு பிறகு அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக தங்கம் விலை குறைந்திருக்கிறது.
இதற்கு காரணம் டாலர் மதிப்பு நல்ல நிலைமையில் இருப்பது தான். பொதுவாக டாலர் மதிப்பு சரியும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அதுவே, டாலர் மதிப்பு கூடும்போது, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறும் நோக்கில், டாலர்களில் முதலீடு செய்வர்.
ஆபரண தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.2,160 குறைத்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,840க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்கப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,300க்கு விற்கப்படுகிது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும் ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்கப்படுகிறது

