இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏற்றம் கண்ட தங்கம் விலை..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.


சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.  

தங்கம் விலை   அவ்வப்போது சற்று குறைவதும், விலை உயர்வதுமாக விற்பனையாகி வருகிறது.  இந்த நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024 -25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலை சரிந்தது.  தொடர்ந்து தங்கம் விலை சரியும் என தெரிவிக்கப்பட்டதால், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அதன்பிறகும் கூட ஏற்ற இறக்கத்துடனேயே  இருந்து வருகிறது.  

தங்கம் விலை

கடந்த 5ம் தேதி  தங்கம் விலை  சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் , நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.560 குறைந்து  சவரன் ரூ.51,200க்கும், கிராம் ரூ.6,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல்  வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.87.50 க்கு  விற்பனையானது. இந்நிலையில் 2வது நாளாக நேற்றும்  சவரனுக்கு ₹560 குறைந்து, ஒரு சவரன்  ₹50,640க்கும் ,  கிராம் ரூ.6,330க்கு விற்கப்பட்டது.  கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளது.  அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.50,800க்கும், கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,350க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல்  வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் சரிந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.86.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.86,500க்கு விற்கப்படுகிறது.