பதற்றத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை...இன்று தங்கம் விலை சற்று உயர்ந்தது..!!

 
Gold

ஆபரண தங்கத்தின் விலை இந்த வார தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் நிலையில்லாத தன்மையுடன் காணப்படுகிறது. மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீடுகள் அதிகரித்தது. இதனால் தங்கம் விலை கணிசமாக குறைந்தது.

கடந்த மாதம் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட காரணத்தினால், மீண்டும் தங்கம் விலை உயர கணிசமாக உயரத் தொடங்கியது. இதனிடையே, தற்போது மீண்டும் இரு நாட்டிற்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளதால், தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 18) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது