இன்றும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..??
Nov 8, 2025, 09:36 IST1762574814369
தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது.
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, நேற்று விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டு வந்த வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றிஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 (இன்று)
07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160 (நேற்று)
06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560
05.11.2025 ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

