தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரு கிராம் ரூ. 7,000ஐ நெருங்கியது..

 
gold


வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  

தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில்  கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் தொடர்ந்து சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். ஆம், அதன்பின்னரும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. 

அதிலும் கடந்த 10 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை நெருங்கியது. அதன்படி கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ. 960ம், கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு  480 ரூபாயும்,  கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு 600 ரூபாயும் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கிராம் ரூ. 6,960க்கும், ஒரு சவரன் ரூ. 55,680 என்கிற புதிய உச்சத்தில் விற்பனையானது. 

தங்கம் விலை

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும்  ரூ.160  உயர்ந்து ஒரு சவரன் ரூ. 55,840 என்கிற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து  ஒரு கிராம் ரூ.6,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை  மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கம் விலை முன்னதாக கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,920க்கும், ஒரு சவரன் ரூ.55,360க்கும் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஒரு சவரன் ரூ.55,980 என்கிற வரலாற்றில் இல்லாத அளவுக்கு  ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.