தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைவு
Apr 23, 2024, 11:34 IST1713852252751

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹55,080க்கும் , ஒரு கிராம் ₹6,885க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,760-க்கு விற்பனையானது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89 க்கும் , வெள்ளி கிலோ 89,000க்கும் விற்பனையானது.