தொடர் உயர்வுக்கு பின் மளமளவென சரிந்த தங்கம் விலை: சவரன் ₹1,20,080-க்கு விற்பனை!
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம் விலை குறைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான நாட்களில் காலை, மாலை என இரண்டு முறை அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 20 நாட்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த விறுவிறு விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதும் நமது நாட்டில் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
நேற்று (ஆகஸ்ட் 22) ரூ. 100 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் ரூ. 800 அதிகரித்து ரூ. 1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 25) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ரூ.1,20,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
- ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
- ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
- ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
- ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800
- ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800

