வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
தங்கம் விலை ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் நேற்று முன் தினம் அதிரடியாக உயர்ந்தது.அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஏப்ரல் 20) தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


