தங்கம் விலை ரூ.240 குறைந்தது..!!
தங்கம் விலையானது சில நாட்களாக கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. டாலரில் வர்த்தகம் நடைபெறுகிற கச்சா எண்ணெய் விலை உயர்வால், டாலர் மதிப்பும் உயர்ந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறும் நோக்கில் பங்குச்சந்தைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியிருக்கிறது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக ஏறிய தங்கம் விலை இன்று சொற்ப அளவில் குறைந்திருக்கிறது.
தங்கத்தின் விலை இன்று (ஜூன் 17) சற்று குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.112,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,060-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.112,480-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கும் விற்கப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

