ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹352 குறைந்தது!
Jun 3, 2024, 10:21 IST1717390279217
![gold](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1ab80a033c38ef851633d01dae3135b4.jpg)
சென்னையில் கடந்த 1ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேசமயம் நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.44 ரூபாய் குறைந்து ரூ.6,666-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.