சவரன் ரூ.1 லட்சத்தை கடந்து உச்சம்: வார தொடக்கத்திலும் தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை!
Oct 19, 2026, 09:51 IST1792383714135
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து நகை வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில் கடந்த வார இறுதியில் அதிகரித்த தங்கம் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலும் மேலும் உயர்ந்துள்ளது.
எனினும், இந்த விலை மாற்றங்கள் தற்காலிகமானது தான் என்கின்றனர் நிபுணர்கள். அதற்காக இனிவரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்று கேட்டால் அதற்கான துல்லியமாக பதில் இல்லை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையாகிறது.
அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

