ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஒரே நாளில் கிடுகிடு உயர்வு

 
gold

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.  கடந்த 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.  7ஆம் தேதி சென்னையில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது.   சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரித்துள்ளது.ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது.