#BREAKING ஒரு கிராம் தங்கம் ரூ.21,000-ஐ தாண்டுமா?

 
gold

அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.21,000-த்தை தாண்டும் என அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Gold

தங்கம் விலையானது நாள்தோறும் தாறுமாறான மாற்றங்களை சந்தித்து வருகிறது. மேற்காசியாவில் நிகழும் போர் பதற்றம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் விலை மாற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை குறையும் வரை தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். உலக சந்தையை பொருத்த வரை, டாலர் மீதான முதலீடு அதிகரித்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதுவும் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மேற்கு ஆசியப் போரினால் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயரக்கூடும் என ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் வெளியிட்ட கணிப்பின்படி, அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை, தற்போதைய விலையை விட 40%க்கும் அதிகமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.21,000-ஐ தாண்டி, சுமார் ரூ.21,600 வரை உயரக்கூடும். 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.16 லட்சத்தை எட்டக்கூடும். பணவீக்கம் குறித்த அச்சம் மற்றும் உலக அரசியல் பதற்றம் தங்கத்தின் தேவையை அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.