#BREAKING தங்கம் விலை மேலும் ரூ.10,000 குறையும் என தகவல்

 
gold

அமெரிக்காவில் செப்டம்பர் மாத வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

gold

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய பொருளாதார சூழல், பணவீக்கம், முதலீட்டாளர்களின் கவனம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட இந்தியாவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.குறிப்பாக, பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவும் காலங்களில் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி பலரும் வாங்குவதால் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வது மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியை மீண்டும் 6% ஆக குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரி உயர்வால் சட்டவிரோத தங்கக்கடத்தல் அதிகரித்திருப்பதாக நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் குற்றஞ்சாட்டுகின்றன. இதன் விளைவாக கடந்த மே மாதம் 15% ஆக உயர்த்தப்பட்ட தங்கம் இறக்குமதி வரியை மீண்டும் 6% ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரி குறைக்கப்பட்டால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 வரை குறைய வாய்ப்புள்ளது.