காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,400 உயர்வு..!!
Updated: Jun 12, 2026, 10:13 IST1781239408148
கடந்த மார்ச் மாதத்திலிருந்தே அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் விலை சற்று அதிகரித்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தால் தங்கம் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை தற்காலிகமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த ஓரிரு வாரங்கள் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை
நேற்று (ஜூன் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 12) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது

