தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

 
gold

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. 

gold

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனையானது.  ஒரு கிராமுக்கு  ரூ. 35 குறைந்து ஒரு கிராம்  தங்கம் ரூ. 6625-க்கும் விற்பனையாகியது.   நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 உயர்ந்து ரூ. 53, 328-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 41 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6666-க்கும் விற்பனையாகியது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது.  ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,685க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.